2024-ம் ஆண்டு குரு பெயர்ச்சி ராசி பலன்கள் - துலாம்

2024-ம் ஆண்டு குரு பெயர்ச்சி ராசி பலன்கள் - துலாம்

எதையும் நுட்பமாக செய்து மகிழ்ச்சியடையும் துலாம் ராசி வாசகர்களே!
 
எதிர் வரும் 01-05-2024 முதல், குரு உங்களின் ராசிக்கு இதுவரை களத்திரஸ்தானத்திலிருந்து அட்டம ஸ்தானத்தில் அமர்வதும். மறைவு ஸ்தானத்தை பார்வை இடுவதும் நன்மையாக அமையும்.
 
குருவின் அருள் இருந்தால் எல்லாம் ஜெயம்தான். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளும் உங்களின் பண்பு.. சிறப்பாக அமையும். உங்களின் விரைய ஸ்தானத்தை பார்ப்பதால், சுப விரையம் உண்டாகும். குடும்பத்தில் வீடு கட்டுதல், திருமணம் செய்து வைத்தல், தான தர்மம் செய்தல் போன்ற புண்ணிய காரியங்கள் உண்டாகும். நல்ல காரியம் சீக்கிரம் நடக்கும். 
 
அதுபோல் வெளிநாடு செல்ல முயற்சி செய்து வருபவருக்கு வெளிநாடு செல்லவும். வெளிநாட்டு தொடர்புகள் மூலம் தொழில் வாய்ப்பைப் பெறுவதும். குடும்ப நன்மைக்காக குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவதும் நடக்கும். உங்களின் தனஸ்தானத்தை குரு பார்வையிடுவதால்.. எந்த தொழில் செய்தாலும், உத்தியோகத்தில் இருந்தாலும் பொருளாதார வளர்ச்சியையும், வருமானத்தையும் அதிகரித்து கொள்வீர்கள்.
 
கலை துறையிலிருக்கு நல்ல வாய்ப்புகள் உண்டாகும். காரிய அனுகூலம் உண்டாகும். சுகஸ்தானத்தை குரு பார்ப்பதால், புதிய வாகனம் வாங்குதல், காலிமனை வாங்குதல்,, வங்கி மூலம் வீடு கட்டுதல், வீடு புதிதாக வாங்குதல் போன்ற வாய்ப்புகள் அமையும். தந்தை வழி சொத்து தொடர்பான வழக்குகளில் சிலருக்கு சற்று முன்னேற்றம் உண்டாகும்.
 
பொது விடயங்களில் ஈடுபாடு இருந்தாலும் முழு கவனம் செலுத்தமாட்டீர்கள். எந்த காரியமாக இருந்தாலும் விரைந்து முடிக்க வேண்டுமென்று எண்ணுவீர்கள். அட்டம குரு என்பதால் பிணயம் இடுவதை தவிர்த்து விடுவது நல்லது. கடன்கள் வாங்கும் போது கட்டுக்குள் வைத்துக் கொள்வதும் நல்லது. சரியான நேரத்தில் உங்களின் கடமைகளை செய்யும் வழிகள் நியாயமாக அமையும். அடுத்த வரை பற்றி நினைக்காமல் உங்களின் சேவையை தொடர்ந்து செய்து வருவீர்கள்.
 
பரிகாரம்:
 
வியாழக்கிழமைகளில் குரு காயத்ரியை சொல்லி, குருவுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வர, உங்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும்.